2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

நகைக் கடையில் கொள்ளை; அறுவர் சிக்கினர்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம். கீத், எப்.முபாரக் 

திருகோணமலை நகரில், தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்.சீ. வீதியில் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் நகைக் கடையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 6 பேர், நேற்று (27) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

புல்மோட்டை பிரதேசத்தில் மூவரும், மொரவேவ பிரதேசத்தில் ஒருவரும், சமுத்திராகம பிரதேசத்தில் ஒருவரும், சீனன்குடா பிரதேசத்தில் ஒருவருமாக 6 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

நகைக் கடையில் கொள்ளைபோன 35 பவுன் நகைகளில் 17 பவுன் நகைகள், புத்தளம் மாவட்டம் கற்பிட்டி, எமாரவில பிரதேசங்களில் கொள்ளையர்களால் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் நகைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும், இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரும் கொள்ளைக் கூட்டத்தின் தலைவராக செயற்பட்ட 34 வயதுடையவரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்றும் 6 தோட்டாக்களுடனான மெகசீன், கைக்குண்டு, வாள் ஆகியனவும் கைப்பற்றபட்டதாகவும் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X