2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நகைக்கடையில் கொள்ளை; தீவிர விசாரணை

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம், அ.அச்சுதன்

திருகோணமலை என்.சீ வீதியில் உள்ள நகைக்கடையொன்றில், நேற்றிரவு (10) 7.15 மணியளவில் நகை மற்றும் பணம் ஆகியன கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளன. 

நகைக்கடைக்கு வாள்களுடன் வந்த குழுவினர் அங்கிருந்தவர்களைப் பயமுறுத்தி, நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டு, கடல் மார்க்கமாக படகில் ஏறிச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

அதேவேளை, நகைக்கடையில் கொள்ளையிடும் காட்சி அடங்கிய சிசிடிவி காணொளியைப் பெற்றுள்ள பொலிஸார், விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X