2025 ஜூலை 31, வியாழக்கிழமை

நஞ்சு கலந்த நீரைப் பருகிய விவசாயி வைத்தியசாலையில் அனுமதி

Thipaan   / 2016 ஜூலை 04 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை கந்தளாயில், நஞ்சு கலந்த நீரைப் பருகி மயக்கமுற்ற விவசாயியொருவர், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கந்தளாய், நான்காம் கொலனியைச் சேர்ந்த பி.குலசேகர (வயது 53) என்பவரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) மாலை, குறித்த நபர் தனது வயலுக்கு கிருமிநாசினி விட்டு, வேலைக் களைப்பில் வாய்க்காலில் ஓடிய நீரை நன்றாகப் பருகியுள்ளார். அரை மணித்தியாலயத்தின் பின்னர் அவர், திடிரென மயக்கமுற்று விழுந்ததைக் கண்ட அருகிலுள்ள வயல்காரர்களால் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குறித்த நபரின் வீட்டாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வாய்க்காலில் திட்டமிட்டு நஞ்சு கலக்கப்பட்டதா அல்லது எண்ணை (நஞ்சு) விசிறப்பட்ட உபகரணத்தைக் கழுவிய போது நீரீல் நஞ்சு கலந்துள்ளதா போன்ற விசாரணைகளை கந்தளாய் வைத்தியசாலைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .