Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
எப். முபாரக் / 2018 நவம்பர் 13 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி கூடுதலான தொகுதிகளைக் கைப்பற்றுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளர் வைத்தியர் அருண சிறிசேன தெரிவித்தார்.
கந்தளாயில், நேற்று (12) மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தகர்களுடனான சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தற்போது நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான கேள்விகள் அதிகரித்து வருவதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சியின்போது, நாட்டில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை, ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ளார் என்றும் கூடிய விரைவில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாற்றத்தைக் கட்சியில் காணுவீர்கள் என்றும் தெரிவித்த அவர், அதன் பிற்பாடு கட்சியின் செல்வாக்குகள் இன்னும் மேலோங்கும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago