Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
தனது நண்பனை கடுமையாகத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய கிண்ணியா, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனை யாழ்ப்பாணம், அச்சுவேலி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் மே மாதம் 12 ஆம் திகதி வரை வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் சரவணராஜா உத்தரவிட்டார்.
கடந்த 25ஆம் திகதி கிண்ணியா, குறிஞ்சாக்கேணி, நண்டுக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான தனது நண்பன் ஒருவனை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கிண்ணியா பொலிஸாரினால் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிமன்றத்தால் இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
போதைப் பொருள் பாவனை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட சிறுவனை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளான சிறுவன் ஆபத்தான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் பொது வைத்தியாலைக்கு மாற்றப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .