2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நாடக பயிற்சிப் பட்டறை

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பிரதேச செயலக கலாசார அதிகார சபையால் இலவசமாக  இளைஞர் யுவதிகளுக்கு  நாடக பயிற்சிப் பட்டறையொன்றை  நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பேச்சு, நடிப்பு ஆகிய ஆக்கத் தொடர்பாடல் வடிவங்களை இளந்தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இந்தப் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்காக நாடகம், குறுந்திரைப்படம் போன்ற துறைகளில் ஆர்வமுள்ள 18-35 வயதுக்கு இடைப்பட்ட  கலைஞர்கள்  பங்குபற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதில் இணைந்துகொள்ள விரும்புவோர்,  தங்கள் விவரங்களை, மார்ச் 25ஆம் திகதிக்கு முன்னர்  0775025625 என்ற அலைபேசி  இலக்கத்தோடு தொடர்புகொண்டு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு, முதற்கட்டமாக  25 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்படவுள்ளர் என்பதோடு,  கலந்துகொள்பவர்களுக்கு தேர்ச்சிப் பயிற்சி சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .