2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நிந்தவூரில் 115 வீடுகள்

Editorial   / 2019 ஜனவரி 10 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்,  ஹஸ்பர் ஏ ஹலீம்

வறிய மக்களின் நலன் கருதி, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக, 5 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, நிந்தவூரில் 115 வீடுகள் கொண்ட வீட்டுத்திட்டம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா, நாளை மறுதினம் (12) நடைபெறவுள்ளது.

மீரா நகர் வலயத்தில் 20 வீடுகளும் வன்னியர் வலயத்தில் 20 வீடுகளும், மாந்தோட்டம் வலயத்தில் 24 வீடுகளும், புது நகர் வலயத்தில் 16 வீடுகளும், தலைவர் வீடமைப்பு வலயத்தில் 35 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.

மேலும், பூரணப்படுத்த நிதி வசதி இன்றி பகுதியளவில் இருக்கும்  25 வீடுகளையும் முழுமைப்படுத்திக் கொடுப்பதற்கான வேலைத்திட்டமும் இதனுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படவுள்ளது.

மேற்படி வீட்டுத்திட்டம் ஒரு பரிச்சாத்த நடவடிக்கையாகும்.இதனைத் தொடர்ந்து மேலும் பல வீட்டுத் திட்டங்கள் பல்வேறு ஊர்களில் முன்னெடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X