2025 மே 05, திங்கட்கிழமை

நிரந்தர நியமனம் குறித்து மாகாண கல்வியமைச்சுக்கு முன்னால் போராட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ்

கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் 456 பேருக்கும் நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி, கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு முன்னால், கிழக்கு மாகாண தொண்டராசிரியர்கள், இன்று (25) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாணக் கல்வியமைச்சால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் போது 456 தொண்டராசிரியர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், அந்தப் பெயர்ப்பட்டியல், கொழும்புக்கு அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், அதில் 187 தொண்டராசிரியர்களின் பெயர்கள் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு நேர்முகப் பரீட்சைக்கு வருமாறு, கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனையோருக்குக் கடிதம் கிடைக்காமையால், தங்களுக்கு அநியாயம் இடம்பெற்றுள்ளதென, பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.

யுத்த காலத்தின்போது, எதுவிதக் கொடுப்பனவும் பெறாமல், பாடசாலைக்குச் சென்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதிலும், கிழக்கு மாகாணக் கல்வியமைச்சால் நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டு, தெரிவுசெய்யப்பட்ட நிலையிலும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையென, போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X