Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஐந்து வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிஸ் தலைமையில் சனிக்கிழமை (30) இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தற்கால அசாதாரண பொருளாதார சூழலில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற, நிரந்தர வீடுகளின்றி கஷ்டப்படுகின்ற ஐந்து குடும்பங்களுக்கு மேற்படி வீடுகள் கையளிக்கப்பட்டது.
சிலி நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச தொண்டு ஸ்தாபனமான SELAVIP Foundation நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் மக்கள் சேவை மன்றம் 40 நிரந்தர வீடுகள் இந்த ஆண்டு நிர்மாணித்தது.
இவை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வுகள் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் இந்நிகழ்வு ஆறாவது கட்டமாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் எம். நௌபர் (திருமலை பிரதேச சபை உறுப்பினர்), என். எம். ஹிதாயத்துல்லாஹ் (அதிபர்). கே. எம். றியாஸ் (சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்), மக்கள் சேவை மன்ற சிரேஷ்ட உத்தியோகத்தர்களான . பிரகலநாதன், எம். யூ. குவைசர், திருமதி. பீ. கிருஷ்ணவேணி, . எம். சாஸ்த், உலமாக்கள் மற்றும் சமூக மட்ட நிறுவன உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதுடன் இந்த வீட்டு திட்ட உதவி புரிந்த மக்கள் சேவை மன்றத்திற்கு பயனாளிகளும், கலந்து கொண்ட அதீதிகளும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஏ.எச் ஹஸ்பர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .