2025 மே 19, திங்கட்கிழமை

நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எ.எம்.கீத், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தில், இன்று(17) ஹஸன் மௌலவி நற்பணி மன்றம், அசீஷா பவுன்டேஷன் இணைந்து, 3800  குடும்பங்களுக்கான உலருணவுப்  பொதிகளினை வழங்கி வைத்தது.

தோப்பூர், ஆலங்கேணி உள்ளிட்ட பல பிரதேசங்களுக்குமான  உலருணவுப் பொதிகளை அசிஸாபவுன்டேஷனின் தலைவர்களான தாரிக் ஹசன், சாதிக் ஹசன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

கந்தளாய் அக்போபுர ரஜமகா விகாரையை அண்மித்து வசிக்கின்ற 300 தேவையுடைய குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகளினை, இன்று கந்தளாய் அக்போபுர விகாரையின் விகாராதிபதி மற்றும் கந்தளாய் பிரதேச செயலாளர் எம் என் உபேக்ஸா குமாரி ஆகியோரிடம் கையளித்தனர்.

இதற்கான நிதியுதவியை ஜேர்மன் நாட்டின் முஸ்லிம் ஹெல்பன் அமைப்பு வழங்கி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X