அப்துல்சலாம் யாசீம் / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் பிரதம நீதவானாகக் கடமையாற்றிய எம்.எச்.எம். ஹம்ஸா, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில், மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் பிரியாவிடை வைபவம் நடைபெற்றது.
திருகோணமலை நீதவான் நீதிமன்ற உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பிரியாவிடை நிகழ்வில், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். கண்ணன், திருகோணமலை மாவட்ட நீதிபதி எம்.பீ.முஹைதீன், மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
நீதவானின் சேவையைப் பாராட்டி, நினைவுச் சின்னங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
14 minute ago
48 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
48 minute ago
57 minute ago
1 hours ago