2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நீதவான் வீட்டுக்குள் திருட முயற்சி

தீஷான் அஹமட்   / 2017 நவம்பர் 13 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோப்பூர் அல்லை நகரைச் சேர்ந்த மூதூர் ஹாதி நீதிமன்ற நீதவான் எஸ்.எம்.றிஸ்வான் மௌலவியின் வீட்டுக்குள் திருடுவதற்காக ஜன்னலை உடைத்து உள் நுழைந்த திருடன், நீதிபதியைத் தாக்கி விட்டுத் தப்பித்துச் சென்றுள்ளான் என, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் காயமடைந்த நீதவன், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், இன்று (13) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்குள் நுழைந்த திருடன், கபட்டினை உடைத்துத் திருடுவதற்கு முற்பட்ட போது, அசைவை அவதானித்த வீட்டு உரிமையாளரான நீதவான், மின் குமிழியைப் போட்டு, திருடனை நையடைப்பு செய்ய முற்பட்டபோது, திருடன் தனது கையிலிருந்த டோச் லைட்​டால் அவரை தாக்கி விட்டு தப்பித்துச் சென்றுள்ளான்.

அதேவேளை, ஜன்னலை திறப்பதற்காகக் கொண்டு வந்த சாவிகளையும் விட்டுச் சென்றுள்ளான். திருடன் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியும் பிய்ந்த நிலையில் காணப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார், மோப்ப நாயின் உதவியுடன் திருடனைத் தேடி வலைவிரித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X