2025 மே 02, வெள்ளிக்கிழமை

நீதி கோரி சவப்பெட்டியுடன் வீதிமறியல்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக், அ.அச்சுதன்

திருகோணமலை, சர்தாபுர பகுதியில் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய காரின்  சாரதியை உடனடியாக பொலிஸார்  விடுதலை  செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சவப்பெட்டியுடன் வீதிமறியல் போராட்டத்தில் பிரதேச மக்கள் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம், திருகோணமலை - கண்டி பிரதான வீதி, சர்தாபுரப் பகுதியில் இன்று (01) காலை 9 மணி முதல் இடம்பெற்று வருகின்றது. 

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார், மோட்டார் சைக்கிளில் வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த நபருடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அதே நாளில் அச்சாரதியை விடுதலை செய்துள்ளதாகவும் இந்தக் குடும்பத்துக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரியும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பிரதான வீதியில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி விபத்தில் திருகோணமலை, கப்பல்துறை 6ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அந்தோனிமுத்து அந்தோணிசாமி (48 வயது) எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X