2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

நீதிபதிகள் இடமாற்றம்

Princiya Dixci   / 2021 மார்ச் 18 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ் 

இலங்கை நீதித்துறை அலுவலர்கள் 72 பேருக்கான இடமாற்ற பட்டியலை நீதிச் சேவை ஆணைக்குழு இவெளியிட்டுள்ளது. இந்த இடமாற்றங்கள் யாவும், 05.04.2021ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வருகின்றன.

இதன் பிரகாரம், திருகோணமலை மாவட்டத்தில் பின்வரும் இடமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

திருகோணமலை மாவட்ட நீதிபதி பி.சிவகுமார், மன்னார் மாவட்ட நீதிபதியாகவும் மன்னார் மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜா, திருகோணமலை மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர் .

கல்முனை மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றும் பயாஸ் ரஸ்ஸாக், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார். திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றும் திருமதி இலங்கசிங்க, தம்புள்ள மாவட்ட நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

மூதூர் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றும் எம்.எஸ்.எம் சம்சுதீன், கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார். வவுனியா மேலதிக மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றும் திருமதி எச்.எம். தஸ்னீம், மூதூர் மாவட்ட நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X