2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘நீதிமன்ற ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கவும்’

Princiya Dixci   / 2021 ஜூலை 14 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை நீதிமன்ற  நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குமாறு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு  கடிதம் மூலம் அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கொரோனா நெருக்கடியான காலப்பகுதியிலும் திருகோணமலை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள  நீதிமன்றங்கள்  இயங்குகின்றன.

“இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சென்றுவருகின்றனர். போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எனப் பலர் இங்கு தொடர்புபடுவதால், அங்கு கடமையாற்றும் நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் ஊழியர்கள் கொரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

“இதனால் தமக்கும் கொரோனா தடுப்பூசியை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சட்டத்தரணிகள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“இந்த இக்கட்டான காலகட்டத்தில் நீதிமன்றங்களில் கடமையாற்றுபவர்களின் பாதுகாப்பு  கருத்திற்கொள்ளப்பட வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, இங்கு கடமையாற்றும் 150 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசியை ஏற்றுவதற்கு  நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .