2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நீரோடையில் விழுந்து 2 வயது குழந்தை பலி

Princiya Dixci   / 2021 மே 24 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் வீட்டுக்கு முன்னால் உள்ள நீரோடையில் விழுந்து இரண்டு வயது குழந்தை பலியான சம்பவம், இன்று (24) இடம்பெற்றுள்ளது.

சிராஜ் நகர், மயில் தீவு பகுதியைச் சேர்ந்த ஏ.அகிலா எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குழந்தையைக் காணவில்லை என சுமார் அரை மணி நேரம் தாய் தேடிய நிலையில், வீட்டுக்கு முன்னால் உள்ள நீரோடையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம், தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X