2025 மே 01, வியாழக்கிழமை

நீர் மட்டத்தை அதிகரிக்க மணல் அணை அமைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

திருகோணமலை - கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட சூரியபுர பிரதேசத்தில் பாயும் மகாவலி ஆற்றுக்குள் ஒரு பகுதியில் மணல் அணையை, இராணுவமும் திருகோணமலை நீர் வளங்கள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து, இன்று (09) அமைத்தனர்.

நீர் குறைந்துகொண்டு செல்லும் கந்தளாய் குளத்தின் நிலமையைத் தொடர்ந்தே திருகோணமலை மாவட்ட குடிநீர் பாவனையாளர்களின் குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டே, இவ் அணை அமைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து மகாவலி கங்கையில் நீர்வரத்துக் குறைந்ததை அடுத்து மகாவலி கங்கையில் இருந்து குடிநீர் பெற்றுக்கொள்ளும் சூரியபுர பிரதேசத்தில் நீரின் மட்டத்தை அதிகரிக்கும் பொருட்டே, மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .