2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நீர் விநியோகம் தொடர்பான கூட்டம்

Princiya Dixci   / 2022 மார்ச் 15 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தீஷான் அஹமட்

இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முன் ஆயத்தக் கூட்டம், திருகோணமலை, சேருநுவர வதிவிட திட்ட முகாமையாளர் காரியாலயத்தில் இன்று (15) நடைபெற்றது.

மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான நீர்விநியோகத்தை எவ்வாறு, எந்தக் காலப்பகுதியில் வேளாண்மைச் செய்கைக்கு வழங்குவது உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இக்கூட்டத்தில் சேருநுவர, மூதூர், தோப்பூர், கிளிவெட்டி, முன்னம்பொடிவெட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 42 விவசாய சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள் ,பொருளாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டதோடு, விவசாயிகள் தமது கேள்விகளை வருகைதந்த அதிகாரிகளிடம் கேட்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் அல்லை நீர்வழங்கல் திட்டத்தின் முகாமையாளர் தேசப்பிரிய, கமலநல சேவை நிலைய மாவட்ட உதவி ஆணையாளர், இராணுவ அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய போதனாசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மாவிலாறு ஆற்றிலிருந்தே விவசாய நிலங்களுக்கு நீர் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X