Princiya Dixci / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
மக்களின் நாளாந்த நுகர்வுப் பொருட்களான சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.
கிண்ணியாவில் நேற்று (04) நடைபெற்ற மக்கள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“சீனி மோசடியாளர்களை இனம் கண்டு, அதில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயம் கோப்புக்கு வந்துள்ளது. கொள்ளையடித்த பணத்தை மீள அரசுக்கு வழங்க வேண்டும்.
“தேங்காய் எண்ணெய் போன்ற கலப்படம் இனிமேலும் இடம்பெறாமல் இருக்க யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
அதேவேளை, மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ரிஷாட் எம்.பி,
“இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துறையில் இன்றும் மிகவும் பின்னடைந்தவர்களாகவும் குடும்ப செலவுகளுக்கு முகங்கொடுக்க முடியாதவர்களாகவும் கஷ்டப்படுகின்ற போது, வெளிநாட்டு மீனவர்கள் இலங்கையில் வந்து மீன்பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது என்பது புத்திசாலித்தனமல்ல. அதை நாங்கள் வன்மையாக எதிர்க்கின்றோம்” என்றார்.
8 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Nov 2025
16 Nov 2025