Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2019 மார்ச் 07 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் குறிஞ்சாக்கேணி பொது நூலகத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறிஞ்சாக்கேணி நூலகமானது, எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி இயங்கி வருவதாக, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பொது நூலகம் அமைந்துள்ள கட்டடமானது, பழமைவாய்ந்த கட்டடம் என்றும் முன்னர் கிராம சபை நடத்தப்பட்ட கட்டடத்திலேயே, தற்போது நூலகம் இயங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறுது.
நூலகத்தில் மாணவர்களுக்கான பகுதி, சிறுவர்களுக்கான பகுதி, நாளாந்த பத்திரிகை பகுதி என வெவ்வேறாக இயங்க வேண்டிய பிரிவுகள் அனைத்தும், இடப்பற்றக் குறை காரணமாக ஒரே இடத்தில் இயங்கி வருவதால், மாணவர்கள், வாசகர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கிண்ணியா பிரதேச சபை உருவாக்கப்பட்டு 12 வருடங்களுக்கு மேலாகின்ற போதிலும் இந்நூலகமானது எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்குத் தேவையான புத்தகங்கள் இல்லை எனவும் மாணவர்களுக்கான பாடநூல்கள் இல்லை என சுட்டிக்காட்டப்படுகிறது. எனவே, இந்நூலகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென்று பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025