Editorial / 2020 ஜனவரி 12 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா பிரதான வீதிகளில், கனரக வாகனத்தின் போக்குவரத்தை, வார நாள்களில் காலை 7 மணி தொடக்கம் 8 மணி வரையும் மதியம் 1 மணி தொடக்கம் 2.30 வரையான நேரத்துக்குள் தடை செய்து தருமாறு, கிண்ணியா திருகோணமலை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரிடம், கிண்ணியா சூரா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த நேரப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் அதிகமாக வீதியில் சஞ்சரிப்பதால், கனரக வாகனங்கள் மிக வேகமாகப் பயணிக்கும் போது விபத்துகள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக, சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இந்த நேர ஒழுங்கை கட்டுப்படுத்தித் தருமாறு, மேற்படி சபை கோரிக்கை விடுத்துள்ளது .
4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago