2025 மே 17, சனிக்கிழமை

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தவர் கைது

Thipaan   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியாவில், நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நபரை, செவ்வாய்க்கிழமை (27) இரவு கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், தனது மனைவியைப் பிரிந்து வாழ்வதுடன், அவர்களுக்கு தாபரிப்புப் பணம் செலுத்தாத நிலையில் தலை மறைவாக இருந்ததாகவும், பின்னர், அவருக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, சமூகமளிக்காத காரணத்தாலும் இவருக்கு நீதிமன்றத்தினால் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை, திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (28) ஆஜர்படுத்தவுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .