2025 ஜூலை 31, வியாழக்கிழமை

பிணைக்குக் கையொப்பமிட்டவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஜூலை 05 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

சட்டவிரோதமான முறையில், கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட ஒருவருக்கு, பிணையாளராகக் கையொப்பம் இட்ட நபரை, இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எல்.ஜி.விஸ்வானந்த பெர்ணாண்டோ, நேற்று திங்கட்கிழமை (04) உத்தரவிட்டார்.

திருகோணமலை, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறிந்த சந்தேகநபரான பிணையாளர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட ஒருவரின் பிணைக்காக, நீதிமன்றில்  கையொப்பம் இட்டுள்ளார்.

குறித்த வழக்கின் பிரதான சந்தேகநபர், பல வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காததால் பிணையாளரை ஞாயிற்றுக்கிழமை (03) இரவு கைது செய்த சீனக்குடா பொலிஸார், பிணையாளரை  திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (04) ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .