Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்,எப்.முபாரக்,அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு மாகாணப் பட்டதாரி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் தாம் சித்தி பெற்ற போதும்இ நேர்முகப் பரீட்சையில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சையின்போது 305 பேர் சித்தி பெற்ற நிலையில் 222 பேர் நேர்முகப் பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு நியமனங்கள் திங்கட்கிழமை (20) வழங்கப்பட்டன
இந்நிலையில் பரீட்சையில் சித்தி பெற்ற தங்களுக்கும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று நேர்முகப் பரீட்சையில் புறக்கணிக்கப்பட்ட ஆசிரியர்கள் திருகோணமலை விவேகானந்தா கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுட்டை பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் மாகாண முதலமைச்சர் செயலகத்தில் திங்கட்கிழமை (20) மாலை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இவ்வாறு 83 பேர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாதிக்கப்பட்ட பட்டதாரிகள், போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற தமக்கு நேர்முகப் பரீட்சையை நடத்தி அதில் தம்மை நீக்கியது முறை அற்றது எனவும் கூறினர்.
பாதிக்கப்பட்ட பட்டதாரிகளின் பிரச்சினையைக் கேட்டறிந்த முதலமைச்சர் இதற்குரிய தீர்வைப் பெற்றுத் தருவதற்கு முயற்சி எடுப்பதாகக் கூறினார்.
அத்துடன் மாகாண சபையானது விசேட அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிப் பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத் தருவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் வாக்குறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago