Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 17 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
பயனாளிகளுக்கு வழங்கப்படவிருந்த மீன்பிடி வலைகளைத் திருடிய கடற்றொழில் - நீரியல் வளங்கள் திணைக்களத்தின் திருகோணமலை உதவிப் பணிப்பாளரை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா, நேற்று வியாழக்கிழமை (16) உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய உபாலி சமரதுங்க (வயது 45) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை மீன்பிடித் திணைக்களத்தில் மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருந்த 04 இலட்சத்தி 26ஆயிரம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் களஞ்சியசாலையிலிருந்து திருடப்பட்டிருப்பதாக களஞ்சியப் பொறுப்பாளரினால் திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அம்முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் உதவிப் பணிப்பாளரினால் அவை திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.
அதனையடுத்து பொதுச் சொத்துக்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago