2025 மே 23, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான கலந்துரையாடல்

Princiya Dixci   / 2016 மார்ச் 28 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனைத்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இலங்கைத் தேசிய கொள்கையினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், எதிர்வரும் 31ஆம் திகதி வியாழக்கிழமை திருகோணமலை, உப்புவெளியில் அமைந்துள்ள முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சிக் கூடத்தில் காலை 9.30மணி தொடக்கம் பிற்பகல் 2.30மணிவரை நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து  திணைக்களத் தலைவர்களுக்கும், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபயகுணவர்த்தன கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளார். 

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள திணைக்களத் தலைவர்கள் கலந்துகொள்வதோடு இக்கலந்துரையாடலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திணைக்களத் தலைவர்களைத் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X