Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் காட்டுப்பகுதியில் புதையல் தோண்ட முயன்ற சந்தேகநபர்கள் 09 பேரைக் கைது செய்துள்ளதாக, புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை (12) இரவு 10 மணியளவிலேயே இவர்களைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், கைது செய்யப்பட்ட 09 பேரும் 35வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவித்தனர்.
இவர்கள், கொழும்பு, இரத்தினபுரி, யக்கல மற்றும் சூரியவெவ பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
குறித்த காட்டுப்பகுதியில் சிலர் புதையல் தோண்ட முயல்வதாக, பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், அந்த இடத்தைச் சுற்றி வளைத்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்திய வேனும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் புதையல் தோண்டும் ஆயுதங்கள் எவையும் மீட்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
40 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
4 hours ago