2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 15 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 22ஆம் பிரிவு தல்கஸ்வௌ காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேரை செவ்வாய்க்கிழமை (14) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்தச் சந்தேக நபர்கள் புதையல் தோண்டுவதாக தமக்குக் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த காட்டுப்பகுதிக்குச் சென்று தாம் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, இந்தச் சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த இடத்திலிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கோடரி, மண்வெட்டி உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்களில் இருவர் அக்போபுரப் பகுதியையும் மற்றைய இருவரும் கொழும்பு, ஹோமாகமப் பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .