2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு எதிராக உத்தரவு

Niroshini   / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், பொன்ஆனந்தம்

திருகோணமலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள், போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுத்தல் மற்றும் பொதுசொத்துகளை சேதப்படுத்தி பொதுமக்களை பாதிக்கும் வகையில் போராட்டங்களை நடத்ததுவதற்கு எதிராக திருகோணமலை நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பான கட்டளையை பிறப்பிக்குமாறு திருகோணமலை தலமையக பொலிஸார் தொடர்ந்த வழக்கை விசாரித்த  திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா, மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பான கட்டளையை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் செயலாளர்,பொருளாகருக்கும் எழுத்து மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 திருகோணமலை தலமை பொலிஸ் நிலயத்தின் சார்பாக பதில் பொறுப்பதிகாரி ரி.எம்.ஜயந்த கடந்த 29ஆம் திகதி நிதிமன்றத்தில் முன்நிலையாகி,

திருகோணமலையில்  நடைபெற்றுவரும் யொவுன்புர என்ற அரச நிகழ்திட்டம் 29ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 2ஆம் திகதி வரை நடைபெறும் நிலையில்,  இந்நிகழ்வில் ஜனாதிபதி,பிரதமர்  ,உட்பட  வெளிநாட்டுப்பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது   ஆளுநர் செயலகத்தின் முன்பு போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள   பட்டதாரிகள்,  பிரதான போக்குவரத்தை தடைசெய்யும் வகையில், போராட்டத்தை நடாத்த திட்டமிட்டுள்ளனர்.

 அவர்களுக்குதவியாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு  போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக புலன் ஆய்வுத்தகவல்கள் எமக்கு கிடைத்திருக்கின்றன.

 அவ்வாறு அவர்கள் ஈடுபடாமல் இருக்க கட்டளையொன்றை 1979 ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல்  நடவடிக்கைசட்டக்கோவையின் 106(1) ஆம்பிரிவின் கீழ் குறித்த அமைப்பின் தலைவர்களுக்கெதிராக  பிறப்பிக்குமாறு கோரியிருந்தார்.

இதனை ஆராயந்த நீதவான் குறித்த சந்தர்ப்பத்தையும் நியாயத்தையும் புரிந்தகொண்ட நிலையில் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X