2025 மே 20, செவ்வாய்க்கிழமை

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை கால்கள்

Gavitha   / 2016 ஜூன் 25 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை றோட்டரி கழகத்தால், தமிழ்நாடு சேலம் றோட்டரி மாவட்ட 2982 அனுசரணையுடன், யாழ்ப்பாணம் றோட்டரி கழகத்தின் உதவியுடன் திருகோணமலையைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை கால்களை பொருத்தும் நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு, எஸ். மணிவண்ணன் - (இயக்குநர்ஃ சமூக சேவை துறைஃ கிழக்கு மாகாணம்) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சேலம் றோட்டரி கிளப் முன்னாள் தலைவர் சிவகுமார், இந்தத் திட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். அவருடன் இணைந்து புதுச்சேரி றோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் ஸ்ரீகாந்த், யாழ்ப்பாணம் றோட்டரி கிளப் தலைவர் அனுராக் மற்றும் ஜப்பனீஸ் றோட்டரி கிளப் (நுவளரமழ வுயமமையறய). ஏசுகி தகிக்கவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருகோணமலையைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட 44 பேருக்கு இந்தச் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டதாக, றோட்டரி கிளப்பின் திருகோணமலை தவிசாளர் டொக்டர் ஜீ.குணாளன் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X