Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூன் 11 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார், எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத், பைஷல் இஸ்மாயில், பதுர்தீன் சியானா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
நாட்டின் பல பிரிவுகளாக திட்டமிடல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்தவகையில், திருகோணமலையின் அபிவிருத்தி திட்டமிடலை சிங்கபூர் நாட்டு அமைப்பு மேற் கொண்டு வருகின்றது. நாட்டின் பாரிய பொரளாதார அபிவிருத்தியை மேற்கொள்ளவதற்கான திட்டமிடல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டமிடல் பணி ஜீன் மாதம் நிறைவடையவுள்ளன என பிரதமர் ரணிவிக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பான கலந்துரையடலை இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் குளுவுடன் மேற் கொள்ளப்பட்டன.
நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முதலமைச்சர் செயலகத்தில் கிழக்கு மாகண முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என எல்லோரிடமும் எதிர்பார்ப்புள்ளது.அதனை எற்படுத்தும் முகமான நடவடிக்கையை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
திருக்கோணமலையை அபிவிருத்தி செய்ய அதிகளவிலான சந்தர்பங்கள் உள்ளன. திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் முகமான திட்டமிடலை சிங்கபூர் நாட்டின் அமைப்பொன்றுக்கு வழங்கியுள்ளோம். அதனை அவர்கள் செய்து வருகின்றனர். அது நிறைவடைந்தவுடன் சிங்கபூர் பிரதமருடன் இது தொடர்பாக பேச்சுவாரத்தை மேற்கொள்ளவுள்ளோம்.
இவ்வாறே நாட்டின் அபிவிருத்தி திடடம் 5 ஆண்டுகளுக்காக மேற்கொண்டு வருகின்றோம். இந்நடவடிக்கை வரும் ஜீன் மாதம் நிறைவடையவுள்ளன.
இந்த அபிவிருத்திப்பணிகளில் தொழில்துறை அபிவிருத்தி, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, தொழில்நுட்ப அபிவிருத்தியை நாம் எற்படுத்தவேண்டியள்ளது. பழைய காலத்தில் பொலன்னறுவை, திருகோணமலை போன்ற இடங்கள் முக்கியமான துறைமுக போக்குவரத்து மற்றும் விவசாய தொழில்துறை அபிவிருத்தியில் சிறந்து விளங்கியுள்ளது.
அவ்வாறான பல அபிவிருத்தியை மீண்டும் ஏற்படுத்துவதற்கான திட்டமிடலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக இன்று முதலமைச்சருடனும் கலந்துரையாடலை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளன என்றார்.
நாட்டில் வேலை வாய்ப்பு, தொழில்துறை அபிவிருத்தி, விவசாயத்துறையில் அபவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் பல விடயங்களில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியும். அதற்கான நடவடிக்களையே நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
இதனடிப்படையிலேயே, திருகோணமலையில் அபிவிருத்திட்டமிடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையில் ஜனாதிபதியும் அக்கறையுடன் செயற்படுகின்றார். இது மிகப் பெரிய திட்டம். ஜீலை மாதமளவில் சிங்கபூருடன் நாம் இது பற்றி பேசவுள்ளோம்.
இந்தியாவின் விசாகப்பட்டனம், குமாரப்பட்டினம் போன்றவற்றுடன் திருகோணமலை துறைமுகத்தையும் எப்படி இணைத்து இந்த அபிவிருத்தியைச் செய்யலாம் எனத் திட்டமிடப்பட்டு வருகின்றோம்.
இவ்வாறன பல நீண்ட கால திட்டமிடல் செய்யப்பட்டு, நாட்டின் பொருளாதார அபிவிருத்தி பற்றி முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு செய்கின்ற போது நாட்டில் நிலையான சமாதானத்தை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago