2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக கந்தளாய் மீனவ சங்க உறுப்பினர்கள் தெரிவிப்பு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 04 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய்க் குளத்தில் பெரும்பான்மையின மீனவர்கள் வீச்சு வலைகளை பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவதால், தாம் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக   கந்தளாய்  மீனவ சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கந்தளாய்க் குளத்தில் 200க்கும்  மேற்பட்ட மீனவர்கள்; நாளாந்தம் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.                              

கந்தளாய் குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் தமிழ் பேசுகின்ற மீனவர்களின் வலைகளை இல்லாமலாக்குவது, தோணிகளை எரிப்பது, கடுமையான விதிமுறைகளை ஏற்படுத்துவது போன்ற செயற்பாடுகள் அண்மைக்காலமாக நடைபெற்று வருவதாகவும்  கந்தளாய் மீனவச் சங்க உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

இவ்விடயம் சம்பந்தமாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களிடமும் முன்வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாளாந்தம் பிரச்சினை ஏற்பட்டே வருகின்றன.

கடந்த மாதம் தமிழ் பேசுகின்ற இரண்டு மீனவர்களின் தோணிகள் இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்பிரச்சினை தொடர்பில் அதிகாரிகளும் தலைமைத்துவங்களும் பாராமுகமாக இருப்பதால் மேலும் பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சுமூகமான மீனவத் தொழிலுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கந்தளாய்  மீனவ சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X