2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

பாரதியார் பல்கலைக்கழகம் கிழக்குடன் இணையும்

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பாரதியார் பல்கலைக்கழகம் விரைவில் கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரித் தொழில்நுட்பம், மனித மரபியல், வர்த்தகம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளுடன் இணைந்து குறித்த பல்கலைக்கழகம் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், எதிர்வரும் சில நாட்களுக்குள் திருகோணமலையில் இடம்பெறவுள்ள நிலையான பிராந்திய வளர்ச்சி சூழல் சவால்கள் என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இலங்கை வரும் பிரதிநிதிகள் மூலம் கைச்சாத்திடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .