2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

போலி கடவுச்சீட்டுகள் மூலம் பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பிய பெண்ணுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலையில் போலி கடவுச்சீட்டுகள் மூலம் பலரை வெளிநாட்டுகளுக்கு அனுப்பி வைத்த பெண்ணொருவரை, எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான், நேற்று வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார்.

குச்சவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் போலியான கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி பெண்களை வெளிநாடு அனுப்பிய நிலையில் அதில் ஒருவர் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலே குறித்த சந்தேகநபரை குச்சவெளிப் பொலிஸார், புதன்கிழமை (27) கைதுசெய்து நேற்று (28) திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த சந்தேக நபருக்கெதிராக நீர்கொழும்பில் இவ்வாறான வழக்கொன்று நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .