2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைதான இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வயதுச் சிறுமி ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட தந்தையையும் மகனையும் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா,  இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

தனது தந்தை மது போதையில் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் அதனையடுத்து 18 வயதான சகோதரர் தந்தையில்லாத நேரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் சிறுமி; வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .