2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு

Niroshini   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

“மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர், மட்டக்களப்பு முகத்துவார வாவியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்” என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த திருபாலசிங்கம் சிவதாசன் (வயது 47) எனும் பொலிஸ் உத்தியோகத்தர் சுகயீனம் காரணமாக, கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 16ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.

இங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணி தொடக்கம் காணாமல் போயுள்ளார்.

இவரை வைத்தியசாலையின் விடுதியில் தேடிய நிலையில் இவர், மட்டக்களப்பு - கல்லடி முகத்துவாரத்தின் வாவியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு - கல்லடி முகத்துவாரத்தின் வாவியில் சடலமொன்று கிடப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும் மீனவர்களும் சடலத்தை மீட்டபோது, குறித்த சடலம் பொலிஸ் உத்தியோகத்தர் திருபாலசிங்கம் சிவதாசனின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவரின் சடலத்தை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X