2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

பொலிஸார் ஒருவரை மோதிவிட்டு தப்பிச்சென்ற இளைஞர்கள் விளக்கமறியலில்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                   

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிலொன்றில் பொலிஸார் ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற மூன்று இளைஞர்களையும் இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா நேற்று வெள்ளிக்கிழமை (19) உத்தரவிட்டார்.                                 

கிண்ணியா-நடுவூற்று-சுனாமி திட்ட பகுதியைச் சேர்ந்த 31,23 மற்றும் 29 வயதுடைய இளைஞர்கள் மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.                   

குறித்த மூன்று சந்தேக நபர்களும் மோட்டர் சைக்கிள் ஒன்றில் அனுமதிப்பத்திரமோ தலைக்கவசமோ சாரதி அனுமதிப்பத்திரங்களோ எதுவுமன்றி மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் நின்ற போக்குவரத்து பொலிஸாரை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், வியாழக்கிழமை(18) மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.                    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .