2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பாலம் இடிந்து விழும் அபாயம்

Thipaan   / 2016 ஜூன் 21 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா பிரதேசத்தில் அமைந்துள்ள றஹ்மானியா நகரையும் பெரியாற்றுமுனை பிரதேசத்தையும் இணைக்கும் கட்டையாறு பாலம் தற்போது இடிந்து விழும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பிரதான வீதியில், போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி ஏற்படுகின்ற விபத்துக்களைக் கட்டுப்படுத்துதற்கும் இரு பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்துவற்கும் 2005ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இப்பாலம் கடலுக்குள் இடிந்து விழும் நிலைக்கு வந்துள்ளது.

அத்தோடு, இப்பாலத்தின் இருமருங்கிலும் சிறுவர்களுக்கான ஓய்வு நேரப் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பூங்காவுக்கு வருகின்ற சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகவே உள்ளது.

இந்தப் பகுதி அதிக நீரோட்டம் உள்ள பகுதியாக இருப்பதால் சாதாரண முறையில் பாலம் அமைக்க முடியாது  என்பதை தற்போதைய நிலை எடுத்துக்காட்டுகின்றது. எனவே, நீண்ட காலம் பயன்படக்கூடிய வகையில் நவீன முறையிலான பாலம் அமைக்கப்பட வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .