2025 மே 23, வெள்ளிக்கிழமை

புளிய மரத்திலிருந்து விழுந்தவர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, நொச்சிக்குளம் பகுதியில் புளிய மரத்திலிருந்து தவறி விழுந்த ஒருவர் இடுப்பு உடைந்த நிலையில் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான வீ.ராஜேந்திரன் (வயது 58) என்பவரே இந்த அசம்பாவிதத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு அகதியாகச் சென்று அங்கிருந்து 30 வருடங்களின் பின்னர் நாடு திரும்பிய இவர் தொழில் வாய்ப்பின்றி மிகவும் கஷ்டத்தை எதிர்நோக்கி வந்துள்ளார்;. இந்த நிலையில், இவர் புளியம் பழங்களை மரங்களிலிருந்து பறித்து விற்பனை செய்து வந்துள்ளார். இவ்வாறு புளியம் மரமொன்றில் ஏறி அதன் பழங்களை பறித்துக்கொண்டிருந்த இவர் விழுந்ததைத் தொடர்ந்து உடனடியாக மகாதிவுள்வெவ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X