2024 மே 02, வியாழக்கிழமை

பசுமை வகுப்பறை திறந்து வைப்பு

Freelancer   / 2023 ஜூலை 11 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, சாஹிரா கல்லூரி மற்றும் சிங்கள மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் முதல் பசுமை வகுப்பறை ஒழுங்கமைக்கப்பட்டு கையளித்து வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை(10) இடம்பெற்றது

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர் பி.மதனவாசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, குறித்த பாடசாலையில் ஒழுங்கமைக்கப்பட்ட பசுமை முன்மாதிரி வாகுப்புக்களைத் திறந்து மாணவர்களிடம் கையளித்து வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றுகையில்,“ பசுமை வகுப்பறை நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்ட கற்றல் சூழலாகும்.  இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிளாஸ்டிக் பாவனையை கட்டுப்படுத்தல் மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கும் ஒரு இடமாகவும் இருக்கின்றது”. என தெரிவித்தார்.

மேலும்“பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையிலிருந்து முற்றாக விடுபடவும், அதனை  ஒழிப்பதற்கும் மாணவர்களாகிய  நீங்கள்  முன்னுதாரணமாக  நின்று செயற்பட வேண்டும்” என கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் தவிசாளர் பி.மதனவாசன் தெரிவித்தார்.

அபு அலா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .