2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

படகுப்பாலம் விபத்து: மூவருக்கும் பிணை

Editorial   / 2021 டிசெம்பர் 16 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம் கீத்

கிண்ணியா படகுப்பாலம் விபத்தில் கைது செய்யப்பட்ட படகின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் இருவர் அடங்கலாக மூவருக்கு இன்றையதினம் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களை ஐந்து இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில்   குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதைவேளை, குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X