2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

’படைப்பாக்க ஆளுமைகள்’ நூல் வெளியீடு

Editorial   / 2022 மார்ச் 03 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில், பல்துறைப் படைப்பாளி பா.மோகனதாஸ் எழுதிய “படைப்பாக்க ஆளுமைகள் ( நேர்காணல்கள் )” எனும் நூல், திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் நாளை மறுதினம் (05) வெளியீடப்படவுள்ளது.

கவிஞர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையிலான இந்நிகழ்வில், தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி முதன்மை அதிதியாகவும் பட்டணமும் சூழலும் பிரதேச சபை உபதவிசாளர் முகமட் நெளபர் சிறப்பு அதிதியாகவும் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் வீ.கோணேஸ்வரன் கெளரவ அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நூல், ஈழத்து இலக்கிய வரலாற்றில் அதிக ஆளுமையாளர்களின் (73) அனுபவங்களை பேசும் முதல் நேர்காணல் நூலாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X