Niroshini / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
பணமோசடி செய்த ஒருவருக்கு திருகோணமலை நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை நான்கு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மாத்தளை பகுதியைச் சேர்ந்த எஸ்.பி.பி.ரத்நாயக்க வயது(43) என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பிரதேசத்திலுள்ள கடைகளுக்கு மொத்த விலையில் பொருட்கள் வழங்கி வியாபாரம் செய்து வந்த நிலையில் ஒருவரிடம் பொருட்கள் தருவதாக ஐந்து இலட்சத்து ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய் பெற்ற நிலையில் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாவுக்கு பொருட்கள் வழங்கி ஏமாற்றியுள்ளார்.
இது தொடர்பில் கடை உரிமையாளர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி ரி.சரவணராசா நான்கு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் அத்தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் இரண்டு வருடம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026