2025 மே 05, திங்கட்கிழமை

பணிப்பாளர் நியமனம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 நவம்பர் 29 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக டொக்டர் எம். டி. ஏ. ரொட்ரிகோ தமது கடமைகளை நேற்று (28) பொறுப்பேற்றார்.

கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கிவந்த திருகோணமலை பொது வைத்தியசாலை தற்பொழுது மத்திய அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதையடுத்து  இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர், ஏற்கனவே எம்பிலிப்பிட்டிய பொதுவைத்தியசாலை, கஹவத்த தள வைத்தியசாலை, திஸ்ஸமகாராம தள வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளில் பணிப்பாளராக கடமையாற்றியதுடன், வைத்திய துறையில் மட்டுமல்லாது   நிர்வாகத்துறையிலும் சிறந்த ஆளுமை மிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அத்துடன், நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் வைத்தியசாலையின் குறைபாடுகள், நோயாளிகளுக்கிடையே திருப்தியின்மை போன்ற விடயங்கள் தொடர்பாக தனக்கு அறியத்தருமாறும் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X