2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாட்டிற்கு நன்மை தருமா?

Editorial   / 2023 ஏப்ரல் 24 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

நீதி அமைச்சரால் முன் மொழியப்பட இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாட்டிற்கு நன்மை தருமா என திருகோணமலை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்களின் சம்மேளன செயலாளர் எம்.எம்.மஹ்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு இன்று (24) வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டிற்கான சட்டம் என்பது அனைத்து இன மக்களுக்கும் சமமாக பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர அது சிறுபான்மை சமூகத்தையும் எதிர் கட்சி அரசியல் தரப்பினரையும் அடக்கி, நசுக்குகின்ற தன்மை கொண்டதாக இருக்கக் கூடாது.

கடந்த காலங்களிலே முஸ்லிம், தமிழ் சமூகமும் அரசியல் எதிரிகளும், சிறுபான்மை தலைமைகளும் பயங்கரவாத தடை சட்டம் என்ற ஒன்றால் அநியாயமாக பழி வாங்கப்பட்டார்கள். தற்போது கொண்டு வரப்பட இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் அவ்வாறான தன்மைகளை கொண்டிருக்கக் கூடாது என்றார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னர் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வந்து கொள்ளையடிக்கப் பட்ட நாட்டின் தேசிய சொத்துக்களை தேசிய உடமைகளாக்குவதோடு ஊழல்வாதிகளை தண்டிக்கவும் வேண்டும் என்றார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் மும்மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .