2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பயணக் கட்டுப்பாடு மீறல்; ஒரேநாளில் 11 பேர் கைது

Princiya Dixci   / 2021 ஜூன் 07 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் பயணக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படுவோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணக் கட்டுப்பாட்டை மீறிய 11 பேரை, ஒரேநாளில் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சனிக்கிழமை (05) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், அநாவசியமான முறையில் வாகனங்களில் சென்ற இந்த 11 பேருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோரை பொலிஸார் பிடித்து எச்சரிக்கை செய்தும் விடுவித்துள்ளனர்.

இவ்வாறான சோதனை நடவடிக்கை, திருகோணமலை, மூதூர், கிண்ணியா மற்றும் உப்புவெளி பொலிஸ் பிரிவுகளிலும் முன்னெடுக்ககக்கப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X