2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பயன்படுத்த முடியாதுள்ள மலசலகூடம்

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள மலசல கூடம் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

திருமலை நகர சபையின் கண்காணிப்பின் கீழ் காணப்படும் இம்மலசல கூடம் குத்தகை அடிப்படையில் விடப்பட்டுள்ளடதாகவும் மலசல கூடத்துக்காக ஒரு நாளைக்கு 1,600 ரூபாய் நகர சபைக்கு வழங்கிவருதாகவும் அங்கு பணம் சேர்க்க நியமிக்கப்பட்டுள்ள வயோதிபர் தெரிவித்தார்.

ஒருவரிடம் பத்து ரூபாய் அறவிடப்பட்டு வரும் வேளையில், மலசலகூடம் அசுத்தமான நிலையில் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதால் தூர இடங்களிலிருந்து வரும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இம்மலசல கூடம் அசுத்தமாக காணப்படுவதாக பல முறைப்பாடுகள் திருகோணமலை நகர சபைக்கு தெரிவித்தும் இதுவரை எதுவித நடவடிக்ககையும் எடுக்கப்படவில்லை எனஅப்பகுதியிலுள்ள கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக திருமலை நகர சபையின் செயலாளர் ஏ.எல்.எம்.நபீலுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது,

ஏற்கனவே மக்களின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டு அம்மலசல கூடத்தினை புனர்நிர்மாணம்  செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .