Princiya Dixci / 2021 மார்ச் 09 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சமுர்த்தி பயனாளிகளான 7 குடும்பங்களுக்கு சௌபாக்கிய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் நேற்று (08) மாலை வழங்கப்பட்ட இவ் ஒவ்வொரு வீடுகளும் இரு அறைகளைக் கொண்டுள்ளதுடன், சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை.
காக்காமுனை, நடுத்தீவு, பைசல் நகர், அண்ணல் நகர், ஆலங்கேணி மற்றும் கச்சக்கொடுதீவு போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள சமுர்த்தி பயனாளிகளில் வறுமையிறுள்ள வீடற்றவர்களைத் தெரிவு செய்து இவ் வீடுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.றியாத், தலைமையக சமுர்த்தி முகாமையாளர் ஏ.முஹ்சீன் குறிஞ்சாக்கேணி சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஏ.எம்.றிஸ்வி மகளிர் உத்தியோகத்தர் என்.பானு மற்றும் சமுர்த்தி உத்தியோக்தர்கள் என பலர் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்.
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025