Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
சமூகத்தில் ஆன்மீகம் மற்றும் மானிட மேம்பாட்டுடன் தொடர்புடைய வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்காக நான்கு நாள்கள் வதிவிடப் பயிற்சி நெறியொன்று தொண்டைமானாற்றில் அமைந்துள்ள செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில் நடத்தப்படவுள்ளது.
21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இரு பாலாரும் இப்பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்கலாமெனவும் பயிற்சியில் கலந்து கொள்வோர் சமய தீட்சை பெறுவதற்கும், பயிற்சி வேளையில் வழங்கப்படும் தீட்சை பெற்ற அன்றிலிருந்து தொடர்ந்து 21 நாட்களுக்கு சைவ உணவு மட்டுமே அருந்துவதற்கும் உறுதி கொண்டவர்களாயிருத்தல் வேண்டும்.
பயிற்சி 2019.08.23 ஆம் திகதி அதிகாலை 06 மணிக்கு ஆரம்பமாகும். தூர இடத்திலிருந்து வருபவர்கள் 22ஆம் திகதி இரவு 8 மணிக்குள் சந்நிதியான் ஆச்சிரமத்திற்கு வரவேண்டும்.
தங்குமிடமும் உணவும் பயிற்சியும் இலவசமாக வழங்கப்படும். இப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூபா 10 முத்திரை ஒட்டிய சுய முகவரியிட்ட நீட்டு தபால் உறையை சிவன் மானிட மேம்பாட்டு நிறுவனம், 48, புனித மரியாள் வீதி, திருக்கோணமலை எனும் முகவரிக்கு வேண்டுகோள் கடிதத்தை அனுப்பினால் அவருக்கு விண்ணப்பப் படிவம் அனுப்பப்படும். உங்கள் வேண்டுகோளில் உங்கள் தொலை பேசி இலக்கத்தை எழுத வேண்டும். விண்ணப்ப வேண்டுகோள் எமக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள் 09.08.2019. பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெறுபவர்கள் சமயம், சமூகம் சார்ந்த தொண்டுச் செயற்பாடுகளில் தத்தம் மாவட்டங்களில் ஈடுபடலாமெனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
01 May 2025
01 May 2025