Niroshini / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண சபையினாலும் மத்திய அரசாங்கத்தினாலும் வெவ்வேறு பரீட்சைகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் இவ்விரண்டு பரீட்சைகளும் ஒரே தினத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமையினால் இவற்றுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் பெரும் மனக்குழப்ப நிலைக்குள்ளாகியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில், கிழக்கு மாகாண சபையினால் விண்ணப்பம் கோரப்பட்ட சமூக சேவை உத்தியோகத்தர் தரம்-2,பதிவாளர் சேவையின் 3ஆம் நிலை தரம்-2 ஆகிய பரீட்சைகள் இம் மாதம் 31ஆம் திகதி நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், இவ்விரண்டு பரீட்சைகளுக்கும் தனித்தனியாக பணம் கட்டி பற்றுச்சீட்டினை பெற்ற பட்டதாரி விண்ணப்பதாரிகள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அத்தோடு சமூக சேவை உத்தியோகத்தர் பதவிக்கான பரீட்சை மார்ச் மாதமும் பதிவாளர் சேவை பரீட்சை ஜுலை மாதமும் நடை பெறவிருப்பதாக பரீட்சாத்திகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இவ்விரண்டு பரீட்சைகளையும் வெவ்வேறு தினங்களில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago